நிலவேம்பு கசாயம் வழங்கல்

உளுந்தூர்பேட்டை, அக். 10: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்க கூடிய நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் மஸ்தான், முகமதுஅலி, ஷேக்அம்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான முதியவர்கள், மற்றும் பயணிகள், குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். மேலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: