திண்டிவனம் சார் ஆட்சியர் பொறுப்பேற்பு

திண்டிவனம், அக். 10:  திண்டிவனம் சார் ஆட்சியராக இருந்து வந்த மெர்சி ரம்யா, கன்னியாகுமரி ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் மாவட்ட ஆட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, டில்லியில் பஞ்சாயத்து ராஜ் உதவி செயலராக பணியாற்றி வந்த, ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் அனு, திண்டிவனம் சார் ஆட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

இதனையடுத்து திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையிலுள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியராக அனு நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertising
Advertising

Related Stories: