விக்கிரவாண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்

விக்கிரவாண்டி அக். 10: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் புகழேந்தி நேற்று விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நேமூர், மண்டகப்பட்டு, ஈச்சங் குப்பம், வேலிஏந்தல், நந்திவாடி, பிரம்மதேசம், திருவந்திபுரம், தும்பூர், குண்டலபுலியூர், லட்சுமிபுரம், கஸ்பா கரணை உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடத்தில் ஓட்டு சேகரித்தார். எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, கிருஷ்ணசாமி, விஜயன் எம்பி, முன்னாள் எம்எல்ஏ வானூர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், முன்னாள் அமைப்பாளர் எத்திராசன், தேன்மொழி, அமரஜி, அரிகிருஷ்ணன், சாரதி, அசோக், ரமேஷ், கலாநிதி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், சிலம்பரசன், ஊராட்சி செயலாளர்கள் கவியரசன், ஜெயபால், திருமுருகன், நிர்வாகிகள் வெற்றிவேல், சபரிமுத்து, கில்பர்ட் வேதநாயகம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: