மங்கலம்பேட்டை அருகே சூதாட்டம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

விருத்தாசலம், அக். 2:  விருத்தாசலம் அருகே சூதாட்டம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகாசபரூர் சிவன் கோயில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ரவிச்சந்திரன் (35), சாமியப்பா (58), கருப்பையன் (55) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 ரூபாய் ரொக்கப்பணம்

மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கர்னத்தம் கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த மு.பட்டி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஆதிமூலம் (45) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: