சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் ராஜேந்திரா சுவாமிகள் குருபூஜை விழா

சீர்காழி, அக்.2: சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் 18 சித்தர்களுக்கு தனி கோயில் அமைந்துள்ளது. இங்கு 12ராசிதாரர்களுக்கும் உரிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பசுவை அழிவிலிருந்து காப்பாற்ற பசுமடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று உலக நன்மைவேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒளிலாயத்தை நிறுவிய ராஜேந்திரா சுவாமிக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி ராஜேந்திர சுவாமிகளின் ஜீவசமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரா சுவாமிகள் படத்திற்கு ஏராளமானவர்கள் மலர்கள் தூவி வணங்கி சென்றனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு ஏகாதச ருத்ர ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சீர்காழி எம்எல்ஏ பாரதி, சீனாவை சேர்ந்த குஓபிங், குஓயிங், ச்சென்குய் ஆகியோர் பங்கேற்று 2ஆயிரம் நபர்களுக்கு வேட்டி, புடவை வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதில் போகர்ரவி, பாலசுப்பிரமணியன், ராஜ்மோகன், ஏவிமணி, முத்துதேவேந்திரன், எம்என்ஆர்.ரவி, அன்பு விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நாடி.முத்து, செந்தமிழன், மாமல்லன் செய்திருந்தனர்.

Related Stories: