நிலத்தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்ற விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர்

சேலம், அக். 1:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மனைவி மகேஸ்வரி (50) மகன் யுவராஜ் (35) விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லலிதா என்கிற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு வந்தனர். அப்போது கோவிந்தன், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்மீதும், தனது மனைவி மீதும் ஊற்றிக் ெகாண்டார். அதோடு உடன் வந்த குடும்பத்தினரையும் கட்டி அணைத்துக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதைக்கண்டு திடுக்கிட்ட போலீசார், அனைவரையும் மீட்டு அங்கிருந்து விசாரணைக்காக, டவுன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது கோவிந்தன் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2002ம் ஆண்டு, எங்கள் பகுதியை ேசர்ந்த ஒருவரிடம், நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ₹30 ஆயிரம் கடன் வாங்கினோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 75 ஆயிரம் கொடுத்தோம். அப்போது அசல் வட்டி என 2.50 லட்சம் செலுத்த கொடுக்க வேண்டும், இல்லையென்றால் நிலத்தை தர மாட்டேன் என்றும் சம்மந்தப்பட்டவர் மிரட்டினார். தற்போது நிலத்தின் பத்திரத்தை கேட்டால் ₹6 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். எனவே நிலத்தை மீட்க வழியில்லாமல் போனது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தோம்’’ என்றனர். போலீசார், அவர்களை எச்சரித்து, புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட்   28ம் தேதி இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் தீக்குளிக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: