சேலம் மத்திய சிறையில் 90 போலீசார் சோதனை

சேலம், அக்.1:சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 960 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமான கைதிகள், சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக, அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ெதாடரும் புகார்களையடுத்து, சேலம் மாநகர போலீசார் மத்திய சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இவ்வாறு நடத்திய சோதனையில் கைதி ஒருவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் 32 போலீசார், நேற்று மாலை அதிரடியாக சிறைக்குள் சென்றனர். அங்கு சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தலைமையில் தயாராக இருந்த 55 வார்டன்களும், ைகதிகளின் அறைகளில் நடந்த சோதனையில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ேசாதனையில், தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை.

Related Stories: