காவேரிப்பட்டணம் கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டம்

காவேரிப்பட்டணம், செப்.26:  காவேரிப்பட்டணம் நகர கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம் வங்கி அலுவலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் மதியழகன் வரவேற்றார். பொது மேலாளர் பத்மா தீர்மானங்களை வாசித்தார். கூட்டுறவு வங்கி தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்து  வங்கியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார். இக்கூட்டத்தில் வங்கியின் ‘அ’ வகுப்பு உறுப்பினர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வங்கி மூத்த பணியாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Related Stories: