பட்டுப்புழு வளர்ப்பில் கிரிமி நாசினியின் பயன்பாடு பயிற்சி முகாம்

சின்னசேலம், செப். 25:

சின்னசேலம் வட்டாரத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் பட்டுப்புழு வளர்த்தலில் கிரிமிநாசினியின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் பட்டு வளர்ப்பு துறையினரால் நடத்தப்பட்டது. பயிற்சி முகாமை வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பயிர் காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம், சொட்டு நீர்ப்பாசனம், வேளாண்மைத்துறையில் மானிய திட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். பட்டு வளர்ச்சி துறையின் இளநிலை ஆய்வாளர் குமாரி பட்டுப்புழு வளர்ப்பு பற்றியும், பட்டுப்புழு வளர்ப்பில் கிரிமிநாசினியின் பயன்பாடு, பட்டுப்புழு வளர்ப்பில் மானிய திட்டங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.  

 சின்னசேலம் வட்டார அட்மா திட்ட மேலாளர் மவிசுதா அட்மா திட்ட பணிகள், உழவன் செயலி பயன்பாடு, பண்ணைப்பள்ளி, கண்டுனர் சுற்றுலா பற்றி விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் பண்ணைக்குட்டை அமைத்தல், கூட்டுப் பண்ணைய திட்டம், வேளாண்மைத்துறை திட்டங்கள் பற்றி பேசினார். அட்மா திட்ட உதவி மேலாளர் ஜெயபாலன் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து விளக்க உரை ஆற்றினார். அட்மா திட்ட உதவி மேலாளர் அன்பு நன்றி கூறினார்.  

Related Stories: