வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

திண்டிவனம், செப். 25:     திண்டிவனத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தலைக்கவச விழிப்புணர்வு நடைபெற்றது. திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற தலைக்கவசம் விழிப்புணர்வில் துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அபராதம் விதிக்கப்படும். ஆகையால் அபராதம் கட்டுவதை தவிர்த்து தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், உள்ளிட்டவைகளையும் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால், தற்போது விதிக்கும் அபராத தொகையை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றார். பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Related Stories: