×

அரசு பணி நெருக்கடியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, செப். 20: ராமநாதபுரத்தில் அரசின் பணி நெருக்கடிகளை கண்டித்து ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும், இவற்றை கைவிடக் கோரியும், மாவட்ட அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சோமசுந்தர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை, மாநில உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கடும் பணி நெருக்கடிகளை தருகிறது. வாரத்தில் 3 நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடத்துவது, இரவு நேர ஆய்வுக்கூட்டம் நடத்துவது என அலுவலர்களுக்கு பணி நெருக்கடிகள் தரப்படுகிறது.இதனால் அலுவலர்கள், இருதய நோயாளிகள், சக்கரை நோயாளிகள், பெண்கள் உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இது போன்ற பணி நெருக்கடிகளை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags : protests ,
× RELATED கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் ஒரு நாள்...