மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விக்கிரவாண்டி, செப். 20: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  காத்திருப்பு போராட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நடராஜன் வரவேற்றார் . விக்கிரவாண்டி தாலுகாவில் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு அரசு உதவித்தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . மாவட்ட துணைத்தலைவர் சுப்புராயன், அம்பேத்கர் மன்ற தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, வெங்கடேசன், வசந்த மாலா, ராஜ், அல்போன்ஸ் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: