காசு வைத்து சூதாடிய 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, செப். 20: எலவனாசூர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூத்தனூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழுமலை(30), நம்பி(37), சிங்காரவேல்(47), சண்முகம்(32) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 54 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ 200 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: