கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் இடமாற்றம் கண்டித்தும் போஸ்டர்

புதுச்சேரி,  செப். 20:       மங்கலம் எஸ்ஐயை தொடர்ந்து கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன்  இடமாற்றத்தை கண்டித்தும் நகரில் பரபரப்பு போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. புதுவையில் மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்ஐ கதிரேசன்  ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என  சமூக வலைதளத்தில் பொதுமக்கள் சார்பில் கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தது. இதனிடையே மங்கலத்தில் குற்றங்கள் குறைய காரணமான நேர்மையான அதிகாரி  கதிரேசனின் இடமாற்றலை திரும்ப பெற வேண்டுமென ஆங்காங்கே போஸ்டர்கள்  ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் அடுத்ததாக கோரிமேடு இன்ஸ்பெக்டர்  கண்ணன் இடமாற்றலுக்கும் எதிராக கண்டன குரல் எழுப்பியுள்ளன.  

Advertising
Advertising

 திலாசுபேட்டை,  காந்தி நகர், குண்டுபாளையம், நவசக்தி நகர், விவிபி நகர்,  வீமகவுண்டன்பாளையம், திலகர் நகர், மோகன் நகர் பொதுமக்கள், இளைஞர்கள் என்ற  பெயரில் அச்சடிக்கப்பட்ட இந்த போஸ்டரில் நேர்மையான அதிகாரி கண்ணனை  இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. நகர பகுதிகளில்  ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை அனைவரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.  இந்த இடமாற்றம் தொடர்பாக கவர்னரின் புகார் எண்ணிலும் சிலர்  முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் காவல்துறை வட்டாரத்திலும்  சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: