×

ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கீழக்கரை, செப்.19:  ஓசோன் தினத்தை முன்னிட்டு கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று கடற்கரையில் மனித சங்கிலி நடத்தினர். முன்னதாக பள்ளியின் முதல்வர் ராஜேஸ் கிருஷ்ணன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலாளர் அபுல்ஹசன் முன்னிலை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷமிட்டும் கடற்கரை வரை சென்றது. அங்கு மனித சங்கிலி நடத்தி ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான காரணிகள் குறித்து பேசினர்.

Tags :
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...