திருப்புவனம் வாரச்சந்தை ரத்து கலெக்டருக்கு திமுக கண்டனம்

சிவகங்கை, செப். 11: திருப்புவனத்தில் மேற்கு, கிழக்கு ஒன்றிய, நகர திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சக்திமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை விளக்கி மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பேசினார். திருப்புவனத்தில் வாரச்சந்தை நடைபெற்ற இடத்தை இடமாற்றம் செய்வதில் முன்கூட்டியே உரிய திட்டமிடல் இல்லாமல் அவசர கோலத்தில் செயல்பட்டு சந்தை நடைபெற்ற இடத்தில் பள்ளம் தோண்டியதால் தற்போது சந்தையே நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். புகழ்பெற்ற திருப்புவனம் சந்தைக்கு உரிய மாற்று இடம் ஏற்பாடு செய்யாமல், வியாபாரிகள், பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லாமல் சில தனி நபர்களின் விருப்பத்திற்காக சந்தையில் பள்ளம் தோண்ட உத்தரவிட்ட சிவகங்கை கலெக்டரை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.செப்.15ல் திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வது. வறண்டு கிடக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகர் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், பிரகாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ நிர்வாகிகள் ஆதிபவகன், அண்ணாமலை, போஸ், ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: