பாலகிருஷ்ணாபுரம் பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

திண்டுக்கல், செப். 11:  திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும், சுரங்கபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நாகல்நகர் மேம்பாலம் முன்பு வேலைக்கு செல்ல ஆபத்தான இடத்தில் கட்டிட தொழிலாளர்கள் நிற்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டம். திண்டுக்கல் கடைவீதிகள், நாகல்நகர் மேம்பாலம் பகுதிகளில் கழிவுநீர் ஓடையில் மேல் சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திண்டுக்கல் ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவு ரிக்கார்டிங் வசதி ஏற்படுத்த வேண்டும். என்கொயரி போனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் திண்டுக்கல் அரசு அலுவலகங்களில் பயன்பாடின்றி உள்ள புகாருக்கு அழைக்கும் இலவச தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் எண்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: