இடையர்தவணையில் இலவச மருத்துவ முகாம்

சுரண்டை, செப்.11: சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட  இடையர்தவணையில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ அலுவலர்கள் கீர்த்திகா, தேவி கற்பூரநாயகி, பாலா, கீர்த்தனா, சம்சூல், பிரவீன், செந்தில்குமார் சித்தமருத்துவர் ஹசினாபானு, பல் மருத்துவர் வீரபாண்டியன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஜோஸ் மனநல மருத்துவர் டாக்டர் நிர்மல், எலும்புமுறிவு மருத்துவர் டாக்டர் ரவிச்சந்திரன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். 23 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், அன்பழகன், சண்முகசுந்தரம், மாரியப்பன் கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: