மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த கார் பறிமுதல்

விழுப்புரம், செப். 11: மதுபாட்டில், சாராயம் கடத்திவந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.புதுச்சேரியிலிருந்து  மதுபாட்டில், சாராயம் கடத்திவருவதைதடுக்க விழுப்புரம் மாவட்டத்தில்  மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விழுப்புரம் அடுத்த கம்பன்நகர்  பகுதியில் நேற்று மதுவிலக்குஅமல்பிரிவு எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான  போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வேகமாக  வந்தகாரை கைகாட்டி போலீசார் நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல்  வேகமாகசென்றது. போலீசார் துரத்தி சென்ற நிலையில் சாலையோரமாக  காரைநிறுத்திவிட்டு அதிலிருந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். பின்னர் காரை  சோதனையிட்டபோது அதில் 100 மதுபாட்டில்களும், 100 லிட்டர் எரிசாராயமும்  இருந்தது தெரியவந்தது. வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடிய வாலிபரை தேடி  வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: