×

துத்தியந்தல் கண்மாயில் தூர்வாருவதில் முறைகேடு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், செப்.10: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள துத்தியந்தல் கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, துத்தியந்தல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 180 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. விவாசத்திற்கான நீர் பாசனம் துத்தியந்தல் கண்மாய்யை நம்பி உள்ளது. தற்போது குடிமராமத்து பணிகள் மூலமாக தூர்வாரும் பணிகள் நடக்கிறது. ஆனால் எஸ்டிமேட் படி பணிகள் நடைபெறவில்லை 5மீ., அகலம் கூட தோண்டப்படவில்லை. மழை நீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மடைகள் கட்ட கண்மாய் மண்ணையே பயன்படுத்துகின்றனர். இதனால் சில நாட்களில் மடை சேதமடையும் வாய்ப்பு உள்ளது. குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து ஒப்பந்தப்படி பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக பல கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். பல கண்மாய்களை கலெக்டர் நேரடியாக ஆய்வு நடத்திய நிலையிலும் பணிகள் முறைாக நடக்கவில்லை என புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை