பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,  செப். 10:  உளுந்தூர்பேட்டை பகுதியில் இளைஞர்கள் 10 பேர் மீது பொய்வழக்கு போட்டுள்ள குற்றப்பிரிவு மற்றும்  சம்பந்தப்பட்ட போலீசார் மீது எஸ்பி, எஸ்டி பிரிவு சட்டத்தின்கீழ் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  விழுப்புரம் மாவட்ட பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆட்சியர்  அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை  தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், நாகராஜன், ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

பொன்முடி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  செயலாளர் சரவணன், மதிமுக பாபு கோவிந்தராஜ், மமக முஸ்தாக்தீன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆற்றலரசு, சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: