×

துப்புரவு பணி படுமோசம் நகராட்சி பள்ளி அருகே குவிந்துள்ள குப்பைகள்

ராமநாதபுரம், ஆக.22:  ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் இரண்டு வகுப்புகளும், குழந்தைகள் சத்துணவு மையம், அழகப்பா மாலை நேர கல்லூரி, எலைட் அரசுப்பள்ளி என 5 கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் சத்துணவு கூடம் அருகே குழந்தைகள் விளையாடும் இடத்தில் மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளது. சுகாதார கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ள குப்பைகளை அகற்ற பள்ளி நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், சின்ன குழந்தைகள் குப்பைகளில் உள்ள பொருள்களை எடுத்து விளையாடி கொண்டிருக்கின்றனர்.

எளிதில் தொற்று நோய் பரப்பும் இக்குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மாணவ, மாணவிகளை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
குப்பைகளை தொட் டுவிட்டு உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டு வாந்தி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  நகரை சுத்தமாக வைத்திருக்கும் பணியை செய்யும் நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளே சுத்தமில்லா சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை