நீதிமன்ற நுழைவுவாயிலில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி

திண்டிவனம், ஆக. 22: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயிலில் 2 சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.திண்டிவனம் தென்பசார் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்  செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான  பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் நீதிமன்ற வளாகத்தில்  இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனி இடம் இல்லாததால்  வழக்கறிஞர்கள் நீதிமன்ற நுழைவு வாயில் பகுதியில் இரு சக்கர வாகனங்களை  நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தினந்தோறும் வழக்கு சம்பந்தமாக  நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் முதியவர்களும் நீதிமன்றத்திற்கு  உள்ளே செல்வதற்கு வழி இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.  எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த  வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ேமலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனி இடம் ஒதுக்கி ஷெட் அமைத்து தர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: