அதிகளவில் கரும்பு லோடு ஏற்றிவரும் டிராக்டரால் அடிக்கடி விபத்து

திருக்கோவிலூர், ஆக. 22: திருக்கோவிலூர் பகுதியில் விவசாயிகள் அதிகளவில்   கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் கரும்புகளை திருக்கோவிலூர், முகையூர் ஆகிய ஒன்றியங்களில் தனியார் சர்க்கரை ஆலை மற்றும் பெரிய செவலை பகுதியில்  கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு டிராக்டர்களில் கொண்டு செல்கின்றனர். ஆனால் டிராக்டர்களில் அதிகளவிலான கரும்பு லோடுகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.  திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் வளைவு பகுதி உள்ளதால் அங்கு அடிக்கடி டிராக்டர் கவிழ்ந்து விபத்து நடக்கிறது. மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே டிராக்டர் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதிக லோடு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: