அரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைந்து வழங்க கோரிக்கை

விழுப்புரம்,  ஆக. 22:   கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைந்து  வழங்க முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முண்டியம்பாக்கம்  கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத குடிநீர் இன்றி வறட்சிமாவட்டமாக  உள்ளது. இதுபோன்ற வறட்சியை விவசாயிகள் சந்தித்தது இல்லை. பல ஆண்டுகலாக  கிடப்பில் உள்ள நந்தன்கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். நடப்பு  கரும்பு பருவத்திற்கு தமிழக அரசு அறிவித்த விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய  டன் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ.137.50 விரைவில் வழங்க வேண்டும்.  முண்டியம்பாக்கம், செம்மேடு ராஜ சர்க்கரை ஆலைகளிலிருந்து உற்பத்தி  செய்த மின்சாரத்திற்குண்டான கட்டணத்தை தமிழக அரசு விவசாயிகளுக்கு நேரடியாக  வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது செயலாளர் ஆறுமுகம்,  பொருளாளர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: