திருமானூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

அரியலூர், ஆக. 20: அரியலூர் மாவட்ட விளையாட்டங்கில் திருமானூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரியில் பயிலும் 14, 17, 19 வயது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல், 100, 200, 300 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டி ஓட்டம் உட்பட 47 வகையான போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு போட்டிக்கு திருமானூர் குறுவட்ட செயலாளர் அக்பர்கான் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, செந்தில்வேல் வில்லாளன், ரவி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேட் சேதம்

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உயரம் தாண்டும் விளையாட்டின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள மேட் (பஞ்சு) கிழிந்திருந்தது. எனவே உயரம் தாண்டும் மாணவர்கள் கீழே விழும்போது காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்தாண்டு நடந்த விளையாட்டு போட்டியின்போது உயரம் தாண்டிய மாணவனின் தலையில் அடிப்பட்டு காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: