மாடு உதைத்து முதியவர் சாவு

திருக்கோவிலூர், ஆக. 20:

திருக்கோவிலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). இவர் கடந்த 16ம் தேதி தனக்கு சொந்தமான பசுமாட்டிடம் பால் கறந்த போது அது திடீரென விஸ்வநாதன் மார்பில் எட்டி உதைத்துள்ளது. லேசான வலி மட்டுமே இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துவிட்டார். பின்னர் வலி அதிகனதை தொடர்ந்து உறவினர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: