சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,  ஆக. 20: நாட்டு மக்களின் வாழ்வுரிமையை சீர்குலைக்கும் பாஜக அரசின்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனிமனித சுதந்திரத்தை அழிக்கும்  தேசிய பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். முத்தலாக் தடை  சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு  சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட  செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தாஜிதின்,  கபிரியேல், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலாளர் மூசா  கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அக்பர்அலி,  சைமன்கிருஷ்ணன், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: