சுவாமி தரிசனத்திற்கு செல்ல கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம், ஆக. 14: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நயினார்கோவிலுக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பிரசித்தி பெற்ற நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அரியான்கோட்டை ,பணிதிவயல், நகரம் வழியாக நயினார் கோவிலுக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கூடுதல் பஸ்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகிறோம். ஆர்.எஸ்.மங்கலம். செட்டியமடை ,புலி வீரதேவன் கோட்டை, குயவனேந்தல், அரியான்கோட்டை, பணி திவயல் போன்ற கிராமங்களில் உள்ள நாங்கள் சரியான பஸ் வசதி இல்லாத காரணத்தால் இளையான்குடி, வழியாக பரமக்குடி சென்று சுமார் 45 கி.மீ சுற்றி வரவேண்டிய சூழல் உள்ளது. இதனால் பணம் மற்றும் கால விரையம் ஆகின்றன. எனவே நிர்வாகம் பொதுமக்களின் நலம் கருதி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்