விஷபிஸ்கட் சாப்பிட்ட வாலிபர் சாவு

ராமநாதபுரம், ஆக.14:  ராமநாதபுரம் அருகே விஷபிஸ்கட் சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமநாதபுரம் அருகே பாப்பனேந்தலைச் சேர்ந்த காசிநாதன் மகன் செல்வகுமார்(23). கீழக்கரையில் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் 8 பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் படித்துள்ளார். ஆனால் சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி எலிக்கு வைக்கும் விஷபிஸ்கட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்ததால், மதுரை, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். குணமடையாத நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கவிதை பயிலரங்கம்