வாகன விபத்துகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் திறப்பு

திருப்பூர், ஆக. 14:   திருப்பூரில் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட் துவக்க விழா நேற்று நடந்தது.திருப்பூரில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் அமைக்க சென்னை ஐகோர்ட் மற்றும் அரசு சார்பிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  மோட்டார் வாகன இழப்பீட்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு மாவட்ட கோர்ட் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.  இதை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்திற்கான நீதிபதி நாகராஜ் மோட்டார் வாகன விபத்து வழக்குளை விசாரணைக்கு எடுத்து வேறு தேதிகளுக்கு ஒத்தி வைத்தார்.

முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: