சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

விழுப்புரம், ஆக. 14:    விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாளை சுதந்திரதினத்தையொட்டி அன்று ஒருநாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் விதிகள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு டிரை டே வாக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சியர் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள், டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் இயங்காது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: