திருச்சியில் படித்து வந்த கல்லூரி மாணவி கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலை

விழுப்புரம், ஆக. 14: கல்லூரி மாணவி கடத்தல் தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் வி.அரியலூரை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த மாதம் கல்லூரியில் சேர்த்த அவரது பெற்றோர் விடுதியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு மாணவி வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் பெற்றோரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

இது தொடர்பாக பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் சாலாமேடு இபி குடியிருப்பைச் சேர்ந்த சற்குணசீலன்(28) என்பவர் தான் கடத்தி சென்றுவிட்டதாக கூறியிருந்தார். விழுப்புரத்தில் பள்ளி படிக்கும்போதே இருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், எனவே அவர்தான் கடத்திச்சென்றிருக்கலாம் என புகார்மனுவில் கூறியிருந்தனர். கடத்தப்பட்ட பெண்ணுக்கு 17 வயது என்பதால் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: