மழை இல்லாததால் மானாவாரி கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை

உளுந்தூர்பேட்டை, ஆக. 14: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடந்து வருகிறது. இதில் தற்போது மானவாரியாக கம்பு அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கம்பு விதைப்பு செய்யப்பட்டது. இதன் பிறகு போதிய மழை இல்லாததால் கம்பு போதிய வளர்ச்சி இன்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மானாவாரியாக கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பயிர் காப்பீடு செய்தாலும் விவசாயிகளுக்கு காப்பீடு பணம் வருவது இல்லை என்பதால் பல விவசாயிகள் காப்பீடும் செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மானாவாரியாக கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: