பவானியில் ரூ.1.05 கோடியில் நலத்திட்ட உதவி

பவானி, ஆக. 11:  பவானி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 690 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.  இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது: உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கி இந்தியாவிற்கே முன்னுதாரமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார். மேலும் மகளிர் திட்டம் சார்பில் 295 உழைக்கும் மகளிருக்கு ரூ.73.75 லட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், வருவாய்த்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 389 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை உள்பட 690 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  பவானி நகராட்சி மீன் மார்க்கெட், காவல் நிலையம் அருகே தலா ரூ.13.50 லட்சம் மதிப்பில் 2 சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் தங்கவேலு, முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: