ரயில் மறியலுக்கு முயன்ற 55 பேர் கைது

மதுரை, ஆக.11: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 370வது பிரிவை நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள மக்களை உடன் விடுதலை செய்யக் கோரியும் மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ரயில் மறியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று காலையில் தமுமுக மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் மறியல் செய்ய அக்கட்சியினர் ரயில் நிலையம் முன்பு திரண்டனர்.திடீரென ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மறியல் செய்ய முயன்ற 55 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்

Advertising
Advertising

Related Stories: