திண்டிவனத்தில் அவலநிலை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம்

திண்டிவனம், ஜூலை 24: திண்டிவனம் நேரு வீதியில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் உள்ள குப்பைகளை பெருமாள் கோயில் வீதியில் உள்ள குஷால்சந்த் பூங்கா சிமெண்ட் சாலையின் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் குப்பையின் மீது ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை பலநாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குள் குப்பைகள் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. மேலும் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்கி துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும், மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: