×

கடுமை காட்டுமா போலீஸ் மாவட்டம் ராமநாதபுரம் வெற்றி குற்றவாளிகளை அழைத்து வந்த போலீசார் விடிய விடிய காவல் பரமக்குடி 29வது வார்டில் தொட்டிகளில் தண்ணீர் இல்லை நகராட்சியை முற்றுகையிட மக்கள் முடிவு

பரமக்குடி, ஜூலை 23: பரமக்குடி நகராட்சி 29வது வார்டு பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது. பரமக்குடி நகராட்சியில் 36வது வார்டுகள் உள்ளது. மாவட்டத்தில் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியாக பரமக்குடி உள்ளது. நகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள நீராதாரங்கள் எல்லாம் பருவமழை இல்லாததால், ஊற்று இல்லாமல் பயன்பாடின்றி தூர்ந்து போய் விட்டது. குடிநீர் தேவைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்  கிடைக்கும் தண்ணீரை கொண்டு சமாளித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆள்துழாய் கிணறுகளுடன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்குளை மட்டுமே நம்பியுள்ளனர். பரமக்குடி 36 வார்டுகளில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.,கொடுத்த நிதியில் அமைக்கப்பட்டுள்ள டேங்குகளில் மோட்டார் பழுதாகி தண்ணீர் ஏற்றமுடியாமல் உள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட வாட்டர் டேங்குகள் சேதமடைந்து காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. 29வது வார்டில் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் உள்ள முகமது அலி தெருவில் எம்.பி நிதியில் வாட்டர் டேங்கு அமைக்கப்பட்டது. இதில் முகமது அலி, முசாபர் கனி தெரு, பாசிபவளக்கார தெரு, பகவத்சிங் ரோடு பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதை பயன்படுத்தி வந்தனர். இரண்டு மாதங்களில் மொட்டார் பழுது என்று தண்ணீர் ஏற்றாமல் விட்டுள்ளனர். தற்போது வரை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர் இதுகுறித்து நகராட்சிக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என நகராட்சி மீது குற்றம்சாட்டியுள்ளனர். முகமதுஅலி தெருவை சேர்ந்த ஜகாங்கீர் கூறுகையில், ‘எம்.பி.,நிதியில் 2017ல் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பிறகு செயல்பட வில்லை. இதுகுறித்து நகராட்சி மற்றும் அரசியல் கட்சியினருக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் லாரியில்  வரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இல்லையெனில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை