இன்று 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

ராமநாதபுரம், ஜூலை 18:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 50% சதவீத அரசு இடஒதுக்கீடுக்கான முதற்கட்ட கலந்தாய்வு பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. இதில் பங்கேற்காத விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட  கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது. 8ம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வுக்கு 94 நபர்களுக்கும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியில் விண்ணப்பித்த மாணவர்கள் 436 நபர்களுக்கும் நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

Tags :
× RELATED பராமரிப்பு எப்போதும் இல்லை நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்