ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு

ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் பேராவூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியை எஸ்பி திறந்து வைத்தார்.ராமநாதபுரம் டாக்டர் அப்துல்லா கல்வி அறக்கட்டளையின் சார்பில் ராமநாதபுரம் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி புதிதாக கடடப்பட்டது. இதன் திறப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, நேசனல் அகாடமி பள்ளிகளின் தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா திறந்து வைத்தார்.விழாவில் டாக்டர்கள் பாத்திமா சின்னதுரை, ஹாரிஸ், ஷானாஸ் பாத்திமா, பரூக்,இஜாஸ், ராசிகா, அந்தீப், ஷிபா,அகிலா, அஜிதா, நிஷிதா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள் விசாலாட்சி, நாகலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்