கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 2 நாய்கள் மீட்பு

திண்டிவனம், ஜூலை 18: திண்டிவனம் அருகே விவசாய கிணற்றில் விழுந்து 2 நாட்களாக போராடிய 2 நாய்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் இரண்டு நாய்கள் தவறி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. 2 நாட்களாக கிணற்றில் நாய்கள் தவித்து வந்துள்ளது.இந்நிலையில் இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாயை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததால் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்தானம் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் 2 நாய்களையும் உயிருடன் மீட்டனர்.

Advertising
Advertising

Related Stories: