பட்டதாரி பெண் கடத்தல்?

திருக்கோவிலூர், ஜூலை 18: திருக்கோவிலூர் அருகே பட்டதாரி பெண் மாயமானார். அவரை கடத்தி சென்றதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கச்சிகுத்தான் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் மீனா (20). இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். சம்பவத்தன்று இரவு வேலை விஷயமாக சென்னைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மீனாவின் தாய் மகேஸ்வரி, தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அவரது மனைவி இந்திரா, இவர்களது மகன் பாலு (28), பாலுவின் மனைவி காவேரி ஆகியோர் சேர்ந்து கடத்தியதாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: