அரசு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூலை. 18: நிலுவைத்தொகை வழங்கக்கோரி விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊதியக்குழு முரண்பாடுகளை அனைத்து நிலைபணியாளர்களுக்கும் களைய வேண்டும். 8வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை 2016ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்கிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலும், வருமானத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்திட வேண்டும். சாலைப்பணியாளர்களின் பணிநீக்ககாலத்தை பணிக்காலமாக அறிவித்து அனைத்து சலுகைகளை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசுபணியாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வீரப்பன் முன்னிலை வகித்தார். ஜெய்கணேஷ் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குப்புசாமி, ரமேஷ், விஜயகுமார், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: