மரத்தில் பஸ் மோதி 10 பேர் படுகாயம்

மேட்டூர், ஜூலை 16: மேட்டூர் அருகே கந்தனூரில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே கார் வந்ததால், ஓட்டுநர் பஸ்சை திருப்ப முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்கிருந்த புளியமரத்தில் மோதியது. இதில் டிரைவர் உள்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகலறிந்து வந்த மேட்டூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால், சேலம்-மேட்டூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: