தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி வழங்கல்

திண்டிவனம், ஜூலை 16: ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் தாதாபுரம் மதுரா கீழ்மலையனூர்  கிராமத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயசித்ரா, வேலாயுதம் ஆகியோரது கூரை வீடு எரிந்து நாசமானது. தகவல் அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர்  மாசிலாமணி சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், அரிகிருஷ்ணன், காளி, திருஞானம், குமாரவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: