உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் சாக்கோட்டையில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

அரியலூர், ஜூன் 28: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சியை உதவி விதை அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் அனைவரும் தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விதை வழங்க முன்வர வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்றார். விதை ஒழுங்குமுறை சட்டம் 1966 அமலாக்கத்துறை தொழில்நுட்பம், கருவிதை வல்லுனர் விதை, ஆதார விதை, தரமான சான்று விதை, உபயோகிப்பதன் அவசியம், விதைநேர்த்தி, களை நிர்வாகம், கலவன் நீக்கம், நீர் நிர்வாகம் மற்றும் அறுவடை பின்செய் நோ்த்தி, இயந்திர நடவுமுறை தொழில்நுட்பம் குறித்து கும்பகோணம் வட்டார விதைச்சான்று அலுவலர் செல்வமணி பேசினார். ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் நுண்ணூட்ட மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து கும்பகோணம் வட்டார துணை வேளாண்மை அலுவலா் சாரதி பேசினார். ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்கரவா–்த்தி பேசினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் இளமதி நன்றி கூறினார்.குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: