×

மாஜி பஞ். துணை தலைவர் கொலை நிவாரணம் உடனே வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம், ஜூன் 27: ராமநாதபுரம் மாவட்டம் இளமனூரைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர். கடந்த சில நாட்களுக்கு முன் புழுதிகுளம் கண்மாயில் மணலை விதி மீறி அள்ளியவர்களைத் தடுத்தார். அப்போது மண் அள்ளியவர்கள் தாக்கியதில் மோகன் உயிரிழந்தார். மோகன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கிராமத்தலைவர் ரெங்கதாஸ் தலைமையில் கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 2.6.2019 அன்று புழுதிகுளம் விவசாய கண்மாயில் அரசின் அனுமதி பெறாமல் திருட்டு மணல் கடத்தலை தடுக்க சென்ற மோகன் கொலை செய்யப்பட்டார்.செல்வம், சாத்தையா, லெட்சுமணன் ஆகியோர் படுகாயத்துடன் தப்பியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மணல் கடத்தலுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மோகன் குடும்பத்தினருக்கு அரசு வேலையும், இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணமும் அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். முற்றுகை போராட்டத்தில் மோகன் மனைவி சாந்தி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி நடராஜன் தலைமையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையிட்ட ஊர் முக்கியஸ்தர்களை டிஆர்ஓ முத்துமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். கோரிக்கை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை