×

போதைப் பொருள் ஒழிப்பு பேரணி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜூன் 27:  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, யூத் ரெட் கிராஸ், பெய்த் ஆராய்ச்சி மையம், உதயம் குடி போதை மறு வாழ்வு மையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலை பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை  எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். டிஆர்ஓ முத்துமாரி மற்றும் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர்  ராக்லாண்ட் மதுரம்  முன்னிலை வகித்தனர். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை எஸ்பி வெளியிட கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் ரெட் கிராஸ் சேர்மன் ஹாரூன், ரெட் கிராஸ் புரவலர் தேவி, உலகராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பள்ளி அளவில் நடத்தப்பட்ட சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. பேரணியில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மதுவிலக்கு ஏடிஎஸ்பி லயோலா இக்னேசியஸ், டிஎஸ்பி நடராஜன், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் முத்து கண்ணு மற்றும் ஆசிரியைகள், ரெட்கிராஸ் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை