போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, ஜூன் 27:  ஈரோட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.   உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, ஈரோட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை  கலெக்டர் கதிரவன் கொடியசைத்து துவங்கி வைத்தார். எஸ்பி சக்தி கணேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த பேரணி, ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் துவங்கி, பெருந்துறை ரோடு வழியாக, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் கதிரவன் பரிசு வழங்கினார்.  இதேபோல், ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பிளாட்பார்ம் 1 மற்றும் 2ல் போதை பொருள் ஒழிப்பு தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் விஜேந்திரகுமார் மீனா தலைமை வகித்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: