ஆன்லைனில் இ-அடங்கல் சான்று விவசாயிகள் அலைய தேவையில்லை

விழுப்புரம்,  ஜூன் 27:  விவசாயிகள் அடங்கல் சான்று பெற இனி விஏஓ அலுவலகங்களுக்கு  செல்ல தேவையில்லை. இ-அடங்கல் திட்டத்தின்மூலம் உட்கார்ந்த இடத்திலேயே  ஆன்லைன் மூலம் அடங்கல் சான்றிதழை பெற முடியும். விவசாயிகள், அடங்கல் விவரங்களை பதிவு செய்யவும்,  சான்று பெறவும், `இ-அடங்கல்’ செயலியை பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், பயிர் அடங்கல் விவரங்களை  உள்ளடக்கிய, இ-அடங்கல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வருவாய் கிராமத்தில்  உள்ள அனைத்து சர்வே எண்களின் விவரம், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நில  மதிப்பீடு மற்றும் வேளாண் பயிர்கள் தொடர்பான விவரங்கள் `இ-அடங்கல்’  செயலியில் கிடைக்கும். விவசாயிகள், தங்கள் நில விவரத்தையும், பயிர்  விவரத்தையும், நேரடியாக `இ-அடங்கல்’ மூலமாக பதிவு செய்ய முடியும். விவசாயிகள்தங்களது `இ-அடங்கல்’ விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள், www.tnescvai.tn.gov.in என்ற இணைய பக்கத்தில்,  new user? sign up here என்ற பட்டனை அழுத்தி, புதிய  பயனாளராக பதிவு செய்யலாம். இணைய பக்கத்தில், பயனாளர் பெயர், கடவு சொல்  ஆகியவற்றை உள்ளீடு செய்த பின், அரசுத்துறைகள் வாரியாக பார்த்து,  வருவாய்த்துறையை தேர்வு செய்து, `இ-அடங்கல் கிராப் என்ட்ரி’ ஐ அழுத்தி,  சிகிழி விவரங்களை பதிவு செய்யவில்லை எனில், முதலில் அதை பதிவு செய்ய  வேண்டும்.பொது சேவை மையங்கள் வாயிலாக, சிகிழி விவரங்களை இலவசமாக பதிவு  செய்துகொள்ளலாம். விவரங்களை பதிவு செய்தவுடன், மொபைல் பயன்பாட்டுக்கு  ‘கூகுள் பிளே ஸ்டோர்’ ல் இருந்து, `இ -அடங்கல் ‘என்ற செயலியை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

பின்னர், `இ-அடங்கல்’ செயலிக்குள் நுழைய, சிகிழி பதிவில்  உள்ள மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, ஓ.டி.பி உருவாக்கம் என்ற பட்டனை  அழுத்தி, பெறப்படும் ஓ.டி.பி எண்ணை உள்ளீடு செய்து செயலிக்குள் நுழையலாம்.  செயலியின் முகப்பு பக்கத்தில், சிகிழி எண்ணை தேர்வு செய்து, விவசாயிகள்  விவரம், நிலத்தின் விவரம் மற்றும் பயிரின் விவரத்தை பதிவு செய்யலாம்.  விவசாயிகள், தங்களது ‘இ-அடங்கல்’ விவரங்களை,  www.tne‡cvai.tn.gov.in என்ற இணைய பக்கத்தில்,  பயனாளர் பெயர், கடவு சொல்லை கொடுத்து நுழைந்து, சிகிழி எண்ணை உள்ளீடு  செய்து, உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அடங்கல்  சான்று பெற, கிராம நிர்வாக அலுவலகங்களில், விவசாயிகள் தவம் இருந்த  நிலைமாறியுள்ளது. இனி, ‘ஆன்லைன்’ மூலமாக, எளிதாக அடங்கல் சான்றுகளை  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் வானூர், விக்கிரவாண்டி  தாலுகாவுக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகள் விண்ணப்பித்தவுடன் கிராம நிர்வாக  அலுவலர்கள் செய்யவேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  தாசில்தார்கள் பிரபுவெங்கடேஸ்வரன், பரமேஸ்வரி, சுந்தர்ராஜன், மண்டல துணை  வட்டாட்சியர் வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: